மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில், 6 ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு வி.ஹெச்.பி., மாவட்ட செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். பாக்குகார தெரு, மாகாளியம்மன் கோவிலிலிருந்து கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளின் ஊர்வலம் துவங்கியது.இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக, கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தை ஊர்வலம் அடைந்தது. அங்கு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.