பதிவு செய்த நாள்
24
ஆக
2019
03:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள கோவில்களில், நேற்று 23ல், சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை நரசிம்மசுவாமி கோவில் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவி லில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பகல், 11:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோவிலில், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் உற்சவரை, தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். இரண்டு தேர்களும் ஒன்று கூடி, நேதாஜிசாலை, காந்திசாலை, நரசிம்ம சுவாமி கோவில் தெரு, கோட்டை வழியாக சென்று கோவிலுக்கு வந்தடைந்தது. ஏராளமான இளைஞர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் தேரை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
* தர்மபுரி அடுத்த, ஆட்டுக்காரன்பட்டி ராதாகிருஷ்ணா பிருந்தாவன கிருஷ்ணர் கோவிலில், நேற்று 23ல் அபிஷேகம், பூஜை நடந்தது. காலை, 4:30 மணி முதல், 5:00 மணி வரை மங்கள ஆர்த்தி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி யை தரிசனம் செய்தனர். சிலர், தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிருஷ்ணர் கோவிலில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.