பதிவு செய்த நாள்
24
ஆக
2019
04:08
ஆம்பூர்: கோவில் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி, குழியில் இறங்கி ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் வளையல்கார தெருவில், விநாயகர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால், தன் வீட்டிற்கு செல்லும் வழி அடைக்கப்படுவதாக கூறி, அதே பகுதியை சேர்ந்த மளிகை வியாபாரி செல்வநாதன், 45, கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நிர்வாகி களிடம் கூறினார்.
ஆனால், பணி நடந்து கொண்டிருந்தது. இதனால், ஆத்திரமடைந்த செல்வநாதன் நேற்று 23 ல் மாலை, 4:00 மணிக்கு கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த குழியில் இறங்கி போரா ட்டத்தில் ஈடுபட்டார். ஆம்பூர் போலீசார், வருவாய்த்துறையினர், கோவில் நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், ’கோவில் கட்டுமான பணிகளை நிறுத்தினால்தான், குழிக்குள் இருந்து வெளியே வருவேன்’ என, செல்வநாதன் கூறினார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.