திருக்கோவிலூர் : அரகண்டநல்லூர், கோதண்டபாணிபுரத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவிலில் 9ம் ஆண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அரகண்டநல்லூர், கோதண்டபாணிபுரத்தில் அமைந்துள்ள சுப்ரமணியர் கோவிலில் ஒன்பதாம் ஆண்டு பங்குனி உத்திர காவடி, தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9 மணிக்கு மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதையடுத்து 10 மணிக்கு மேள தாளம் முழங்க கொடியேற்றப் பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 5ம் தேதி காலை 7 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து காவடி ஊர்வலம், தேர் வீதியுலா நடக்கிறது.