ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் திருப்பதிக்கு யாத்திரை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2012 10:03
தர்மபுரி: அரூர் அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 600 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். ஈச்சம்பாடி கிராமத்தில் அனந்தாழ்வார் திருப்பாத யாத்திரை குழு சார்பில் கடந்த 18 ஆண்டாக திருப்பதி திருமைல கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். ஆரம்பத்தில் ஆறு பேர் சென்ற நிலையில் ஆண்டுக்கு, ஆண்டு பாத யாத்திரரை செல்லும் குழுவில் பல பக்தர்கள் இணைந்து பாதயாத்திரை சென்று வருகின்றனர். அரூர், ஈச்சம்பாடி, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, கணபதிப்பட்டி, பறையூர், மருதிப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 600 பக்தர்கள் இந்தாண்டு பாதயாத்திரை செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் என விரதம் இருந்து பாதயாத்திரை புறப்பட்டனர். மொதம் 270 கி.மீ., தூரம் ஆறு நாளில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள இக்குழுவினர் அனுமன்தீர்த்தம் கோவிலில் காப்பு கட்டி தினம் 40 கி.மீ., தூரம் நடந்து செல்வதோடு, வாகனங்களில் சமையல் பாத்திரங்களுடன் பயணம் செய்யும் இவர்கள் வழியில் உள்ள தோட்டங்களில் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு பயணத்தை தொடர்கின்றனர்.