விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் மாவட்ட நிர்வாகம் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2019 02:08
திருவள்ளூர்: விநாயகர் சிலைகளை கரைக்கும் நீர்நிலை விபரத்தினை, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. மாவட்டம் முழுவதும், பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும்.
அவ்வாறு வழிபாடு நடந்து முடிந்ததும், அவற்றினை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை, கலெக்டர் மகேஸ் வரி அறிவித்து உள்ளார்.