பதிவு செய்த நாள்
29
ஆக
2019
03:08
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம், பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர் கருணை விநாயகர் மற்றும் கருவலுார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பட்டி எம்.ஜி.ஆர்., நகர், கருணை விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கருவலுார் மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவில்களின் கும்பாபிஷேக விழா, நேற்று 28ல் நடந்தது.
கடந்த, 27ம் தேதி பவானி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து, கோவில் துாய்மைப்பணிகள் நிறைவடைந்தது. பின்னர், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பிள்ளையார் வழிபாட்டுடன் யாக வேள்வி துவங்கியது. கோபுர கலசம் நிறுவி, தெய்வ திருமேனிகளுக்கு எண் வகை மருந்து சாத்தப்பட்டது.
நேற்று 28ல் காலை, இரண்டாம் கால யாக வேள்வி நிறைவடைந்த பிறகு, தீர்த்தக்குடங்கள் மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் எடுத்து வந்தனர்.பின்பு கருவலுார் மூர்த்தி சுவாமி கள், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஆன்மிக அருளாசி வழங்கினார்.