திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட சுபவிஷயம் தடைபடும் போது பெற்றோர் மனம் படாத பாடுபடும். தடை அகலவும், மணவாழ்க்கை அமையவும் அம்மனுக்கு ஆடி செவ்வாய் (அல்லது) ஆடிவெள்ளியன்று வீட்டிலேயே மாவிளக்கு ஏற்றி வழிபடலாம்.
இடித்து சலித்த பச்சரிசி மாவில், ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைய வேண்டும். காமாட்சி விளக்கு போல குழிவாகச் செய்து, அதில் நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத் திரியிட்டு ஏற்ற வேண்டும். வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் மூடி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு அம்மனுக்கு படைக்க வேண்டும். இதன் மூலம் அம்பிகையே நம் வீட்டுக்கு வந்து அருள்வதாக ஐதீகம். அம்மன்108 போற்றி, அபிராமி அந்தாதி, துர்கை கவசம் போன்ற பாடல்கள் பாடுவது நல்லது. வேண்டுதல் நிறைவேறிய பிறகு மீண்டும் ஒரு செவ்வாய் அல்லது வெள்ளியன்று மாவிளக்கு ஏற்றுவது அவசியம்.