கைலாயத்தை தரிசிக்க விரும்பி திருநாவுக்கரசர் புறப்பட்டார். அவரைச் சோதிக்க விரும்பிய சிவன், முனிவரைப் போல அவர் முன் தோன்றினார். “வயதான காலத்தில் உமக்கு ஏன் இந்த வீண்முயற்சி?” என்று தடுத்தார். நாவுக்கரசர் துணிவுடன், “முதுமையால் அவதிப்பட்டாலும், என் தலைவன் சிவபெருமானை தரிசிக்காமல் போக மாட்டேன்” என்று சொல்லி நடந்தார். வழியில் ஒரு குளம் தென்பட்டது. அதில் மூழ்கும்படி அசரீரி ஒலித்தது. நாவுக்கரசரும் அதில் மூழ்கவே, திருவையாறு ஐயாறப்பர் கோயில் குளத்தில் எழுந்தார். குளக்கரையில் சிவபெருமானின் கைலாய காட்சி கிடைத்தது. மனம் மகிழ்ந்த நாவுக்கரசர், “மாதர் பிறைக் கண்ணியானை...” என்று தொடங்கும் பாடலைப் பாடினார். இதை பாடுவோருக்கு கைலாயத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.