“ஒருவர் தன் திறமையை நல்ல வழியில் பயன்படுத்துகிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?” என தோழர்கள் கேட்டனர். “ஒருவர் தமது குழந்தையின் தேவைக்காகவும், பெற்றோருக்கு பணிவிடை செய்யவும், தன் குடும்பத் தேவையை நிறைவேற்றவும் நியாயமான செயலில் ஈடுபட்டால் அவர் தன் திறமையை இறைவழியில் பயன்படுத்துவதாகப் பொருள். பெருமைக்காகவும், புகழுக்காகவும் பயன்படுத்தினால் ஷைத்தானின் பாதையில் செல்கிறார் என்பது பொருள்” என்றார் நாயகம்.