ஒரு குரங்கு கண்ணாடியை எடுத்து தன் முகத்தை உற்றுப் பார்த்தது. அதற்கு கோபம் வந்து விட்டது. “நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன். இதுவோ என்னை குரங்கு போல் காட்டுகிறதே” என கோபப்பட்டது. மீண்டும் உற்றுப் பார்த்தது. அப்போதும் அதே குரங்கு முகம் தெரிந்தது. கண்ணாடியை வீசி எறிந்தது. இப்போது ஒவ்வொரு சிதறலிலும், அதன் இயற்கை முகமே தெரிந்தது.
இந்த குரங்கு போல நாம் இருக்க கூடாது. உண்மையை உணர வேண்டும். “நான் சரியானவன் தானா! நல்லதை செய்கிறேனா!” என்று சுய விசாரணை நடத்த வேண்டும். இதில் தேற வேண்டுமானால் ஆண்டவரின் கருத்துக்களை பின்பற்ற வேண்டும். கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பவனே, தன் உண்மையான வடிவத்தை ஆத்மா என்ற கண்ணாடியில் கண்டு நிம்மதியாக வாழ்வான்.