பதிவு செய்த நாள்
05
செப்
2019
02:09
கோவை:காருண்யா நகர் பெதஸ்தா சர்வதேச பிரார்த்தனை மையத்தில், இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம், வரும் 8ம் தேதி நடக்கிறது.
பிரார்த்தனை கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனிஷ் சுந்தர், எலைஜா பிளசிங், குளோரி ரவிக் குமார் கூறுகையில், ’கூட்டத்தில், காருண்யா நிகர்நிலை பல்கலை வேந்தர் பால் தினகரன் பேசுகிறார். பொதுமக்கள் பங்கேற்க வசதியாக, வரும் 8ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு, பிரஸ் காலனி, மேட்டுப்பாளையம், மதுக்கரை, மரப்பாலம், ஒண்டிப்புதுார், துடியலுார், சரவணம்பட்டி, கிணத்துக்கடவு, கணபதி, சிங்காநல்லுார், காந்திபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன. காந்திபுரம் - காருண்யா நகர் இடையே, அதிகாலை முதல் இரவு வரை, அரசு பஸ் வசதி உள்ளது’ என்றனர்.