கிருஷ்ணகிரி முத்துமாரியம்மன் கோவில் கட்ட பூமி பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2019 02:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த செட்டியம்பட்டி கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதையொட்டி கடந்த, 18ல், கோவில் புதியதாக கட்டுவதற் கான பாலாலயம் பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துவங்கின.
இதில், அம்பேத்கர் நகர், செட்டியம்பட்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.