பதிவு செய்த நாள்
07
செப்
2019
03:09
கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா வரும், 30ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கரூர் அருகே, தான்தோன்றிமலையில், பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில் தேரோட்ட விழா சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பாண்டு வரும், 30ல் கொடியேற்றத்துடன், விழா துவங்குகிறது. தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம், 3ல், வெள்ளி கருட சேவை, 6ல் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 8ல் நடக்கிறது. 11ல் கருடசேவை, 18ல் முத்துப் பல்லக்கு, 19ல், ஆளும் பல்லக்கு, 20ல் புஷ்ப யாகம் நடக்கிறது.