திருவாடானை:திருவாடானை, எஸ்.பி.பட்டினத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. பா.ஜ., சார்பில் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானையில் வாரசந்தை அருகே உள்ள ஊரணியிலும், எஸ்.பி.பட்டினத்தில் கடலிலும் சிலைகள் கரைக்கப் பட்டது. முன்னதாக விநாயகர் சிலைக்கு சிறப்பு தீபராதனைகள் நடத்தபட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.