புதுச்சேரி: கிருஷ்ணாபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதிநடக்கிறது.
கண்டமங்கலம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில்உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, வரும் 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்கான பூஜை நேற்று (செப்., 9ல்) காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங் கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது.
இன்றும், நாளையும் 10மற்றும் 11ம் தேதிகளில் மூன்று கால யாக பூஜை மற்றும் பூர்ணா ஹூதி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா 12ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து 9.30 மணிக்கு விமான கோபுர மகா கும்பிஷேகம், 9.50 மணிக்கு மூலஸ்தானம், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பிஷேகம் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
மறுநாள் 13ம் தேதி மண்டலாபிஷேக பூஜை துவங்குகிறது.ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.