பதிவு செய்த நாள்
10
செப்
2019
03:09
கன்னிவாடி : கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், உற்ஸவர், நந்திக்கு பால், இளநீர், சந்தன அபிஷேகம் நடந்தது.
விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. திருவாசக பாராயணத்துடன், உற்ஸவர் பிரகார வலம் நடந்தது. அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சின்னாபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில், மூல நட்சத்திர அபி ஷேக, ஆராதனைகள் நடந்தது.
* ஏகாதசி பூஜை: கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
* சின்னாளபட்டி: அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், அம்பாத்துரை விலக்கு பக்த ஆஞ்ச நேயர் கோயிலிலும் ஏகாதசி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.