பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
குளித்தலை: முதலிக்கவுண்டனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பால் குட ஊர்வலம் நடந்தது. குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்., முதலிக்கவுண்டனூரில் மாரியம்மன், விநாயகர், மாணிக்கமலையான், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பிடாரியம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று 13ம் தேதி காலை, கும்பாபிஷேகம் நடைபெறுவதால், கிராம மக்கள் மற்றும் பக்தர்கள், நேற்று 12ம் தேதி காலை, கடம்பர்கோவில் காவிரியில் இருந்து, தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
அவற்றை கொண்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், 200 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.