பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
கிருஷ்ணகிரி: பூரிகைமரத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று 12 ம் தேதி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா மஜீத்கொல்லஅள்ளியில், 500 ஆண்டுகள் பழமையான பூரிகைமரத்து முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று 13ம் தேதி நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் (செப்., 11ல்) காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை, மகா கணபதி ஹோமம் ஆகியவை நடந்தன. நேற்று காலை, 3:30 மணிக்கு, கும்ப கலச பூஜை, மகா கணபதி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து காலை, 5:00 மணிக்கு, முனியப்பன் சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி, கோபுர கலச ஊர்வலத்துடன், புண்ணிய நதியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவை ராயக்கோட்டை பசவய்யா ஆரத்யா குழுவினர் நடத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.