பதிவு செய்த நாள்
14
செப்
2019
03:09
உடுமலை:உடுமலை அருகே மலையாண்டிபட்டணத்தில், சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம்தேதி நடக்கிறது.குரல்குட்டை ஊராட்சி மலையாண்டிபட்டணம் கிராமத்தில் மாதேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 4ம்தேதி முளைப்பாரி போடுதலுடன் துவங்கியது.நாளை, (15ம்தேதி) காலையில், கணபதி ேஹாமம், லட்சுமி குபேர சரஸ்வதி பூஜை, மாலை, 4:00 மணிக்கு வாஸ்து பூஜை, மாலை, 6:00 மணிக்கு புற்று மண் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு வேதிகார்ச்சனை, இரவில், உபச்சார பூஜை மற்றும் சுவாமிகளுக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 16ம்தேதி அதிகாலையில் இரண்டாம் கால யாக வேள்வி நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கிறது.