பதிவு செய்த நாள்
14
செப்
2019
03:09
ஆத்தூர்: மாரியம்மன், விநாயகர் கோவில், கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆத்தூர் அருகே, சொக்கநாதபுரம், மோட்டூரில், மாரியம்மன், விநாயகர் கோவில்கள் உள்ளன. அதன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த, 11ல், கணபதி ?ஹாமம், முதல் யாகசாலை பூஜை, நேற்று முன்தினம், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, மூன்றாம் கால யாகசாலை பூஜைக்கு பின், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு, கோபுர கலசம் மீது, புனித நீரூற்றி, சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். அதேபோல், விநாயகர், பரிவார மூர்த்திகளுக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
பெரியாண்டிச்சியம்மனுக்கு...: வாழப்பாடி, தம்மம்பட்டி சாலையையொட்டியுள்ள, பழமையான பெரியாண்டிச்சியம்மன் கோவிலை சீரமைத்து, வண்ணம் தீட்டி பிரதிஷ்டை செய்தனர். நேற்று காலை, கோவில் வளாகத்திலுள்ள பெரியாண்டிச்சியம்மன், விநாயகர், வீரகாரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, புனித நீரூற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.