பதிவு செய்த நாள்
18
செப்
2019
02:09
அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், மோடி பிறந்த நாளையொட்டி, சிறப்பு வழிபாடு களை, பா.ஜ., வினர் மேற்கொண்டனர்.பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நலமாக வாழ, அவிநாசி பா.ஜ.,வினர் சார்பில், அவிநாசிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.நகர தலைவர் சீனிவாசன், தலைமை வகித்தார்.மாவட்ட பொது செயலாளர் கதிர்வேல், செயலாளர் சண்முகம், நகர பொது செயலாளர் தினேஷ், நிகழ்ச்சி பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.