பதிவு செய்த நாள்
18
செப்
2019
02:09
திருப்பூர்: திருப்பூரில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் ஆன்மிக சொற்பொழிவு இன்று துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.திருப்பூர், காங்கயம் ரோட்டிலுள்ள காயத்ரி ஓட்டலில், தினமும் மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
இதில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி, தினமும் விஷ்ணு புராணம் குறித்து சொற்பொழி வாற்றுகிறார். இன்று பத்ம புராணம் என்ற தலைப்பிலும், நாளை அக்னி புராணம், 20ம் தேதி கருடபுராணம், 21ம்தேதி பிரம்மாண்ட புராணம், 22ம் தேதி நாரத புராணம் ஆகிய தலைப்புகளில் பேசுகிறார். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.