பதிவு செய்த நாள்
18
செப்
2019
02:09
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் 52 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடந்து வருகின்றன.
கடந்த ஜூன் 13ம் தேதி தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் பாண்டியராஜன் இந்த அகழாய்வை தொடங்கி வைத்தார். தொல்லியல்துறை ஆணையாளர் உதயச்சந்திரன், இணை இயக்குனர் சிவானந்தம், ராமநாதபுர மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் ஆசைத்தம்பி மற்றும் மாணவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடம் தேர்வு செய்வது எப்படிதரையை துளைத்து செல்லும் ரேடார் கருவிகள் மூலம் அகழாய்வு செய்யப்படவேண்டிய இடங்கள் ஸ்கேன் செய்யப்படுகிறது.
இந்த கருவி மூலம் 25 மீட்டர் ஆழம் வரை ஸ்கேன் செய்யலாம். தண்ணீரையும் ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள் கட்டடம் போன்ற அசையாப்பொருட்கள் இடம் குறித்து துல்லியமாக கணிக்கும். அதன்பின் குழிகள் தோண்டப்படுகின்றன.அகழாய்வு குழிகள் தோண்டும் முறை தொல்லியல்துறை அகழாய்வில் குழிகள் அனைத்தும் 10அடி நீள, அகலத்தில் மட்டும்தான் தோண்டப்படுகிறது. பொருட்கள் கிடைப்பதை பொறுத்து ஆழம் அதிகப்படுத்தப் படுகிறது. குழிகள் அனைத்தும் மண் வெட்டி, சிறிய கோடாரி, சிறிய மண்வெட்டி, மண் சுரண்டும் கரண்டி ஆகியவற்றை வைத்தே தோண்டப்படுகிறது.
சுவர்கள் கெட்டிப்பாக இருந்தால் ஸ்பிரேயர் வைத்து ஈரப்படுத்தி அதன்பின் குழிகள் தோண்ட ப்படுகிறது. அகழாய்விற்கு குழிகள் தோண்டும் போதே மண் அடுக்குகளையும் ஆய்வு செய்கி ன்றனர். மண்ணின் நிறம், அதனுடைய தன்மை உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப் படுகின்றன. பானை ஓடுகள், எலும்புகள், பாசிகள் உள்ளிட்ட எந்த பொருள் கிடைத்தாலும் அவற்றை எடுத்து தனித்தனியே சேகரிக்கின்றனர். குழிகளில் அகழாய்வு பணிகளின் போது தொழிலாளர்களுடன் அகழாய்வு மாணவர்களும் உடன் இருக்கின்றனர்.
கட்டடம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியும் போது அவற்றை சிதிலமடையாமல் வெளியே எடுக்கின்றனர்.அகழாய்வில் கிடைத்த பொருட்கள்முதலில் கருப்பையா என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது, இதில் வட்டப்பானை, பானை ஓடுகள், சிறிய பானை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. முருகேசன் என்பவரது நிலத்தில் அதிகபட்சமாக 19 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது. இதில் அழகிய செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்தன.
இரட்டைச்சுவர், அதன் தொடர்ச்சி, சிறிய சுவர்கள், தண்ணீர் தொட்டி, உறைகிணறுகள், பெரிய பானைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன. இதில் உறைகிணறுகள் 5 முதல் ஏழு அடுக்குகள் கொண்டவைகளாக உள்ளன.முருகேசன் நிலத்தில் இருந்து 50 மீட்டர் தொலை வில் மத்திய தொல்லியல்துறையின் 2ம் கட்ட அகழாய்வில் உறைகிணறுகள் கிடைத்து இருந்தன. பண்டைய காலத்தில் ஆற்றுப்படுகையில் வறட்சியான காலகட்டங்களில் உறை கிணறுகள் அமைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உறைகிணறுகளின் அருகே தண்ணீர் தொட்டியும் கண்டறியப்பட்டுள்ளதால் அதில் தண்ணீரை சேகரிக்க பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. இரட்டைச்சுவரின் அருகே வளைவான அமைப் பை கொண்ட அழகிய நீண்ட செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது. சதுர வடிவிலான இந்த கட்டுமானத்தின் உட்புறம் குகை போன்ற அமைப்பை கொண்டுள்ளது. மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு புறமாக இந்த குகை போன்ற அமைப்பு செல்கிறது. உட்புறம் நீண்ட வெற்றி டத்தை கொண்ட அமைப்பை கிட்டத்தட்ட பாதாள சாக்கடை போன்ற அமைப்பை இது கொண்டுள்ளது.
முருகேசன் நிலத்தில் இருந்து கிழக்கு புறமாக செல்லும் இந்த நீண்ட குகை போன்ற அமைப் பை மேலும் அகழாய்வு செய்யும் போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் நீர் மேலாண்மையில் தலை சிறந்து விளங்கியது தெரியவரும்.இந்த குகை போன்ற செங்கல் கட்டுமானம் சாய்ந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட இடைவெளியில் இருபுறமும் தாங்கும் சிறிய துாண்கள் போன்ற அமைப்பும் உள்ளது. இதனால் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இந்த குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
சுடுமண் பொருட்கள்5ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள் அதிகளவில் கிடைத் துள்ளன. சுடுமண் பொம்மைகள், சுடுமண் காதணிகள், சங்கு வளையல்கள்,மை தீட்டும் குச்சி, துளை வடிவிலான பானை ஓடுகள், வில், அம்பு வரையப்பட்ட பானை ஓடுகள், சிறிய குடு வைகள், அச்சுக்கள், மொட்டுகள் போன்று வரையப்பட்ட சுடுமண் காதணி, உணவு குவளை உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவு வகைகளை பாத்திரங்களில் வைத்து பயன்படுத்தியுள்ளனர். பண்டைய காலத்தில் உணவு வகைகள் அனைத்தும் தண்ணீருடன் இணைந்தே அருந்தியிருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர் கள் கருதுகின்றனர். உணவு பாத்திரங்கள் அனைத்தும் கீழ்புறம் குவிந்தும் அகன்றும் உள்ளன.
எனவே தண்ணீருடன் இணைத்து அருந்தியிருந்தால் மட்டுமே இதுபோன்ற வடிவத்தை பெற்றி ருக்க முடியும் என கருதுகின்றனர்.திட பொருட்களின் காலம் பற்றி அறிய இந்தியாவிலேயே ஆய்வகங்கள் இருந்தாலும் துல்லியமாக கணிக்க அமெரிக்காவிற்கு அனுப்பி வருகின்றனர். மத்திய தொல்லியல்துறை அகழாய்வில் கிடைத்த பொருட்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என கண்டறியப்பட்டுள்ளது.வராஹி உருவம் பதித்த சூது பவளம், வெள்ளி காசு, பெண்கள் அணியும் பதக்கம் உள்ளிட்டவைகள் 5ம் கட்ட அகழாய்வில் கிடைத்த சிறப்பு மிக்க பொருட்களாகும், விளையாட்டு பொருட்களும் அதிகளவில் கிடைத்துள்ளன.
சிறிய வடிவிலான பொம்மைகள், குடுவைகள், செஸ் காயின் போன்ற அமைப்பில் விளை யாட்டு பொருட்களும் கிடைத்துள்ளன.5ம் கட்ட அகழாய்வு கருப்பையா, முருகேசன், போத குரு, மாரியம்மாள் ஆகியோரின் இடத்தில் மட்டுமே நடந்து வந்த நிலையில் நீதியம்மாள் என்பவரது இடத்தில் பாசன குழாய் பதிக்க இயந்திரம் மூலம் குழி தோண்டிய போது செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது, இதனையடுத்து அகழாய்வை தொடர்ந்த போது நீண்ட தரைதளம், தண்ணீர் செல்லும் சுடுமண் குழாய் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொருட்களை வகைப்படுத்தும் முறைகீழடியில் 5ம் கட்ட அகழாய்வில் இதுரை 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒவ்வொரு பொருட்களும் கிடைத்த இடம், எவ்வளவு ஆழம், பொருட்களின் எடை, உயரம், நீளம் உள்ளிட்டவை அளவீடு செய்யப்பட்டு அதனை புகைப்படம் எடுக்கின்றனர். பொருட்களையும் படம் எடுத்ததுடன் அது கிடைத்த இடத்தையும் படம் எடுத்து அதனை தினமும் சென்னையில் உள்ள தலைமை அலுவலக த்திற்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து பொருட்களின் காலம் கண்டறிய உரிய ஆய்வகங்க ளுக்கு அனுப்புகின்றனர்.
மேலும் வித்தியாசமான பொருட்கள் குறித்து பிரபலமான தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் அதனுடைய படங்கள் உள்ளிட்டவைகளை அனுப்பி கருத்துகளை கேட்டு பதிவு செய்து வருகின்றனர்.அகழாய்வு பணி வரும் 30ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் கீழடி யைச்சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலுார் பகுதியிலும் அகழாய்வை மேற்கொள்ள தமிழக தொல்லியல்துறை திட்டமிட்டு இதற்கான அறிக்கையை மத்திய தொல்லியல்துறை க்கு அனுப்பியுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதமே அகழாய்வை தொடர தமிழக தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது.