முதுகுளத்துார் : முதுகுளத்துார் விஸ்வகர்ம ஐக்கிய சங்கம் மற்றும் ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கத்தின் சார்பில் 15ம் ஆண்டு விஸ்வகர்ம ஜெயந்தி விழா மற்றும் 12ம் ஆண்டு சுந்தர விநாயகர் கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு விஸ்வகர்ம ேஹாமம், கணபதி ேஹாமத்துடன் பூஜை தொடங்கப்பட்டு விநாயகர் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.காலை 9:00 மணிக்கு விஸ்வகர்ம உற்ஸவ மூர்த்தி வழிவிடு முருகன் கோயில், அரசு மருத்துவமனை வழியாக முக்கிய தெருக்களில் திருவீதி உலா நடந்தது. மாலை 5:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் முதுகுளத்துாரை சுற்றியுள்ள பெண்கள் கலந்து கொண்டனர்.விழா கமிட்டியாளர் சார்பில் பொது அன்னதானம் நடைபெற்றது.ஏற்பாட்டினை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.