பதிவு செய்த நாள்
20
செப்
2019
12:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 40 நாட்களில், பக்தர்கள் உண்டியலில், 80 லட்சத்து, 24 ஆயிரத்து, 514 ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வந்து மூலவரை தரிசிக்கின்றனர்.
பின் பக்தர்கள், தங்கள் வேண்டுதலை ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய வற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.அந்த வகையில், 40 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்களை திறந்தனர்.இதில், 80 லட்சத்து, 24 ஆயிரத்து, 514 ரூபாய் ரொக்கம், 450 கிராம் தங்கம், 17 கிலோ, 500 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.