சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் கார்த்திகை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2019 12:09
சின்னாளபட்டி: கார்த்திகையை முன்னிட்டு, சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியம், சதுர்முக முருகனுக்கு பாலாபி ஷேகம் நடந்தது.
பல்வேறு திரவிய அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி தோணிமலை முருகன் கோயில், தருமத் துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.