பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
கரூர்: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. கரூர் அருகே, தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், மேட்டு தெரு அபயபிரதான வெங்கடாஜலபதி கோவில், திருகாம் புலியூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில், புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நேற்று காலை, சுவாமிக்கு பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், அதிகாலை முதலே, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில், நம்பெருமாள் வாகன வீதி உலா நடந்தது.
* கிருஷ்ணராயபுரம் லட்சுமி நாராயணன் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜை நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.