பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
பொள்ளாச்சி :பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள், அர்ச்சனை செய்தும், தீபங்கள் ஏற்றியும் பெருமாளை வழிபட்டனர். மாலையில், பெருமாள் திருவீதி உலா சென்று, அருள்பாலித்தார். பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. பக்தர்கள், விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், திருப்பள்ளியெழுச்சி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒன்பது வகையான அபிேஷகம், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.வாரந்தோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில், திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சன சேவை, அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.