விழுப்புரம்: நவராத்திரி பண்டிகையையொட்டி, விழுப்புரத்தில் கொலு பொம்மைகள் விற் பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 29ம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பிக்கின்றது.
ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையின்போது, பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.அதன்படி, வரும் நவராத்திரி பண்டிகைக்கு விழுப்புரம் காந்தி சிலை அருகில், திரு.வி.க., வீதியில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு பொம்மைகளை வாங்குவதில், பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.