சிவகங்கை : கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிவகங் கையில் நடந்த கோயில் பூஜாரிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.
மாநாட்டிற்கு மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வினோத்குமார் வரவேற்றார். மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு துவக்கி வைத்தார். சிறந்த பூஜாரிகளுக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் விருதுகள் வழங்கினார். மாநில பொருளாளர் சுந்தரம், செயலாளர் சங்கர், மண்டல தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட செயலாளர் அசோகன், துணை செயலாளர் சங்கு மணிகண்டன் பங்கேற்றனர்.தீர்மானம்: கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பூஜாரிகளுக்கு பணி பாதுகாப்பு, மாத சம்பளம் வழங்க வேண்டும் என தீர்மானித்தனர்.