திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில், புரட்டாசி மாத ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
புரட்டாசி மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளிலும் ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், ஆண்டாள் நாச்சியார் சபை செயலர் பாண்டியன் ராமானுஜதாசன் வரவேற்றார்.
தலைவர் சீனுவாச பாகவதர் முன்னிலை வகுத்தார்.சிறப்பு விருந்தினராக மயிலம் எம்.எல்.ஏ., மாசிலாமணி சிறப்புரையாற்றினார்.இதில், மதுராந்தகம் அருள் மன்றம் நிறுவனர் வீரபட்டாச் சாரியார், கருட ஆழ்வார் அருள் என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். ஏற்பாடு களை கணேசன், வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.