செஞ்சி: புலிப்பட்டு கருவாட்சிதாங்கல் வீர ஆஞ்சநேயர் கோவிலில் 8 ம் ஆண்டு கும்பாபிஷேக திருமஞ்சன விழா நடந்தது.
செஞ்சி தாலுகா புலிப்பட்டு கருவாட்சிதாங்கல் கிராமத்தில் உள்ள வீர ஆஞ்ச நேயர் கோவிலில் 8 ம் ஆண்டு கும்பாபிஷேக தின மகா திருமஞ்சன விழா நடந்தது.இதை முன்னிட்டு காலை 7 மணி க்கு சிறப்பு திருமஞ்சனமும், 8 மணிக்கு 108 பால் குட ஊர்வலமும், 9 மணிக்கு சிறப்பு ஹோம மும் நடந்தது. 10 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு 108 குடம் பால் அபிஷேகமும், கலசாபிஷேக மும் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் செய்தனர். பகல் 11 மணியிலிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.