கள்ளக்குறிச்சியில் கால பைரவருக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2019 02:09
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று முன்தினம் (செப்., 21ல்) மாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். பைரவரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும்.
கெட்ட அதிர்வுகள் விலகும் என்பது ஐதீகம் ஆகும்.அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவர் சுவாமிக்கு வெள்ளிக்காப்பு அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்கரித்து, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டினை கார்த்திகேயன் குருக்கள் செய்து வைத்தார்.