பதிவு செய்த நாள்
23
செப்
2019
05:09
* செப்.21, புரட்டாசி 4: திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் 5,008 வடை மாலை அலங்காரம், சிருங்கேரி அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் ஆராதனை, விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கருட வாகனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
* செப்.22, புரட்டாசி 5: மத்யாஷ்டமி, வியதிபாத மகாளயம், லட்சுமி விரதம், சங்கரன் கோவில் சங்கர நயினார் மீது சூரிய தரிசனம், ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
* செப்.23, புரட்டாசி 6: அவிதவா நவமி, பத்ராசலம் ராமர் புறப்பாடு, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்
* செப்.24, புரட்டாசி 7: சுவாமிமலை முருகன் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு
* செப்.25, புரட்டாசி 8: ஏகாதசி விரதம், சன்யஸ்த மகாளயம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு, அகோபிலமடம் 18 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்.
* செப்.26, புரட்டாசி 9: பிரதோஷம், சிவன் கோயில்களில் மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
* செப்.27, புரட்டாசி 10: சஸ்திர ஹத மகாளயம், மாத சிவராத்திரி, அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி திருமஞ்சனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி, அகோபிலமடம் 12வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்