”அனாதையாக வாழ்பவர்கள் பரிதாபமானவர்கள். இவர்கள் தங்கள் எண்ணங்களை எடுத்துச் சொல்லக் கூட ஆள் இல்லாமல் தவிப்பர். இப்படிப்பட்டவர்களைப் பேணுவது நம் கடமை. எங்கு அனாதை குழந்தைகள் நல்ல விதமாக நடத்தப்படுகிறார்களோ அதுவே சிறந்த வீடு. எங்கு அனாதையை மோசமாக நடத்துகிறார்களோ அது கெட்ட வீடு” என்கிறார் நாயகம். ”அனாதைகளை அன்புடன் நடத்துங்கள். அவர்களை குடும்பத்தில் ஒருவராக கருதுங்கள். அவர்களின் தலையை இரக்கமுடன் தடவுங்கள். அவர்களுக்கு வயிறார உணவளிங்கள்”.