நாத்திகர் ஒருவர் மேடையில் ஆண்டவரைப் பற்றி இகழ்ந்தார். அவர் தன் பேச்சின் முடிவில், ’இதுவரை பேச்சைக் கேட்டதில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் அல்லது உங்கள் கருத்தை என்னிடம் பகிருங்கள்” என கூட்டத்தினரை அழைத்தார். யாரும் முன்வரவில்லை. மீண்டும் அழைத்தார். அந்த ஊரிலுள்ள குடிகாரன் ஒருவன் சில மாதங்களுக்கு முன்பு ஆண்டவரை ஏற்று மனம் திருந்தினான். கூட்டத்தில் இருந்த பலருக்கும் அவனைத் தெரியும். அவன் மேடை நோக்கி தயங்கியபடி வந்தான். தன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஆரஞ்சு பழம் ஒன்றை எடுத்து தோலை உரித்தான். ’இந்த பழம் இனிக்குமா, புளிக்குமா?” என நாத்திகரிடம் கேட்டான். கோபத்துடன், ”என்ன உளறுகிறாய்? ருசித்துப் பார்க்காமல் பழத்தின் சுவையை என்னால் எப்படி சொல்ல முடியும்?” எனக் கேட்டார். ”பக்தியும் அது போலத் தான்! அவர் காட்டிய நல்வழிகளை பின்பற்றாமல் அவதூறு பேசுவதில் பயனில்லை” என்றான். நாத்திகரால் பதில் சொல்ல முடியவில்லை.