இளையான்குடி : இளையான்குடி 9வது வார்டு நேதாஜிதெரு முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா மழைவேண்டியும், விவசாயம் செழிக்கவும் நடந்தது. கடந்த வாரம் மதுபோடும் நிகழ்ச்சி நடந்தது.காமராஜர் சாலையில் தொடங்கி கண்மாய்கரை வரை பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று கரைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை வ.உ.சி., இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.