சிவகங்கை அருகே கோவானுாரில் பாண்டியர் கால கல்வெட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2019 02:09
சிவகங்கை: சிவகங்கை அருகே கோவானுாரில் 13 ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலை வர் வே.ராஜகுரு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை அருகே கோவானுார் ஊரணியின் படித்துறை, வரத்து கால் வாய் 300 ஆண்டுக்கு முற்பட்டது. இங்கு 6 துண்டுகளாக கல்வெட்டுக்கள் உள்ளது. இவை 13 ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டு மூலம் கோவானூரில் திருவகத்தீஸ்வரமுடையார் என்ற சிவன் கோயில் இருந்துள்ளது.
கி.பி.,1216 முதல் 1244 ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டி யனின் மெய்க்கீர்த்தி ’பூமருவிய திருமடந்தையும், புவி மடந்தையும்’ என தொடங்கும் 9 பாடல் வரிகள் உள்ளன.
இங்கு பறை, கடமை வரிகள் மற்றும் பாண்டீஸ்வரமுடையார் எனும் கோயிலை சேர்ந்த சிவபிராமணர் பற்றி கல்வெட்டில் உள்ளது. கோவனுார் முருகன் கோயில் கல்வெட்டு மூலம் இக்கிராமம் கீரனுார் நாட்டின் கீழ் இருந்துள்ளது. நில அளவை குறிக்க வேலி, இருமா ஆகிய குறியீடுகள் உள்ளன.
இக்கிராம பொட்டலில் சங்க காலத்தைசேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் காணப்படு கின்றன. கி.பி.,11 ம் நுாற்றாண்டைசேர்ந்த அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பமும் உண்டு, என்றார். ஆய்வாளர்கள் காளிராசா, விமல்ராஜ் உடனிருந்தனர்.