மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில்களில் இணை கமிஷனர் நடராஜன் முன்னிலையில் உண்டியல் திறப்பு நடந்தது. அதில் ரூ. 68 லட்சத்து 61 ஆயிரத்து 606, தங்கம் 610 கிராம், வெள்ளி 3 கிலோ 638 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன. அலங்காநல்லுார் அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல்களில் தங்கம் 21 கிராம், வெள்ளி 415 கிராம், ரூ.28.16 லட்சம், வெளி நாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன.