சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் இருக்கும் இவரை ’காவல் தெய்வம் ’ என்றும் சொல்வர். கோயில் கணக்கு வழக்குகளைச் சரிபார்ப்பதும், சிவ வழிபாட்டிற்கு இடையூறு வராமல் தடுப்பதும் இவரது பணி. கோயிலின் காவல்காரராக இருப்பவர் பைரவர். இவருக்கு ’ஷேத்திரபாலகன்’ என்றும் பெயருண்டு. ’கோயிலை பாதுகாப்பவர்’ என்பது இதன் பொருள்.