பதிவு செய்த நாள்
02
அக்
2019
03:10
புதுச்சேரி:பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வானுார், இரும்பை கிராமம், டோல்கேட் அருகிலுள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், நவராத்திரி விழா கடந்த 29 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, தினமும் மாலை 6:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைகெபற்று வருகிறது.முதல் நாளான 29ம் தேதி, குமரன் கலைக்கூடத்தின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், 30ம் தேதி, நார்தகி நாட்டியாலயாவின் பரதநாட்டியமும், மூன்றாம் நாளான நேற்று நாட்டிய தர்பனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. 4ம் நாளான இன்று, மாலை 6:00 மணிக்கு வீணைக் கச்சேரியும், இரவு 8:00 மணிக்கு சித்ரா ரினேஷ் பரதநாட்டியம் நடக்கிறது.நாளை 3ம் தேதி திருவேணி கலா கேந்திரா, 4ம் தேதி பக்தன் காயத்ரி, 5ம் தேதி சலங்கை கல்சுரல் அகாடமி, 6ம் தேதி பரதகலா மண்டலம் குழுவினர் பரதநாட்டியம் மற்றும் வாய்ப்பாட்டு, 7ம் தேதி தமிழ் நாட்டியாலயாவின் பரத நாட்டிய நிகழ்ச்சியும், 8ம் தேதி நாதஸ்வர கச்சேரி, 9ம் தேதி, கைலாய வாத்திய நிகழ்ச்சி நடக்கிறது.