முத்தாலம்மன் கோயில் தேர் திருவிழா: மும்மதத்தினர் பங்கேற்புடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2019 01:10
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. மழைக்கு அதிபதியான முத்தாலம்மனுக்கு இப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் விழா எடுத்து வழிபடுவது வழக்கம். ஒரு வார காலம் நடைபெறும் இவ்விழா கலை விழாவுடன் துவங்கும். விழாவின் இறுதி நாளில் தேரோட்டம் நடைபெறும். இப்பகுதியை சேர்ந்த அனைத்து கிராம மக்களும் ஜாதி மத பேதமின்றி வழிபடுவார்கள். பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்விழா நேற்று மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமை வகித்தார். பக்த சபா செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். பக்த சபா மூத்த உறுப்பினர் நல்லாசிரியர் ஹரிஹரன் இறைவணக்கம் பாடினார். மதுரை புனித பிரிட்டோ பதின்ம பள்ளி முதல்வரும் மதபோதகருமான சகாயராஜ் ,இஸ்லாமிய மதத்தை சேர்ந்த டாக்டர் முகமது ஷகீல் பேசினர். ஜாதி மத ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது கிராம மக்கள், அனைத்து ஊர் நாட்டாமைகள் கலந்துகொண்டனர். பக்த சபா தலைவர் சுந்தரராஜ பெருமாள் நன்றி கூறினார்.