திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை மகோத்ஸவத்தை முன்னிட்டு நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை காலை 7:00 மணிக்கு கோ பூஜை, கஜபூஜை, யாகசாலை பூஜைகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து திருமஞ்சனம், மகா சுதர்சன நரசிம்மர், தன்வந்திரி, நாராயண மகாலெட்சுமி ஹோமங்கள் துவங்கும். பின்னர் திருமஞ்சனம்,தீபாராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் துவங்கும். பூமாயி அம்மன் கோயிலிலிருந்து சீர்வரிசை எடுத்தலும், மாலை 6:30 மணிக்கு மாலை மாற்றுதலும், ரக் ஷா பந்தனம், கன்னிகாதானம், ஊஞ்சல், பூசுற்றுதல் நடந்து மாங்கல்யதாரனம் நடைபெறும். இன்று ஏக தின லட்சார்ச்சனை நடக்க உள்ளது.