ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி கடைசி சனியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் கிருஷ்ணமராஜபாளையம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஆவரம்பட்டி சோலைமலைப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. அதிகாலை முதல் சோலைமலைப்பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். உறவின் முறையினர் மற்றும் சுற்றுப்பகுதியினர் திரளாக வந்து சுவாமியை தரிசித்தனர்.ஏற்பாடுகளை தலைவர் ராஜரத்தினம், செயலாளர் முப்பழம், தர்மகர்த்தா மதிவானன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
* ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில், கோதண்டராம சுவாமி கோயில், வேட்டை பெருமாள் கோயில், சம்பந்தபுரம் சோலைமலைப்பெருமாள் கோயில், பழையபாளையம் ராமசுவாமி கோயில், செல்லம் பெருமாள் கோயில், மற்றும் தளவாய்புரம் மலைக்கோயில், வடகரை திருவேங்கடமுடையான் திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.