பதிவு செய்த நாள்
14
அக்
2019
03:10
தி.மலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுப்ரமண்யர் தேர் பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா கடந்த, 30ல் நடந்தது. இதை தொடர்ந்து, தீப திருவிழா நடக்கும் நாட்களில் சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேர்கள் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இதில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில் வரும் சுப்ரமண்யர் தேரின் சப்பரம் உடைந்தது. இதை கடந்த ஆண்டு சீரமைத்து வீதி உலா வந்த நிலையில், தற்போது, இந்த தேர் பலவீனமாக உள்ளதை கண்டறிந்து, சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும், விநாயகர் தேர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேர், பராசக்தி அம்மன் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர், ஆகியவற்றை பழுது பார்த்து, வர்ணம் பூசுவதற்கான பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.