திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர், கிழக்குவீதி ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7:00 மணிக்கு ஆஞ்சநேயர்க்கு அபிஷேகம், வெண்ணை காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.