மேலுார்: மேலுார் அருகே தனியாமங்கலம் அடைக்கலம் காத்த அம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி திருவிழா நடந்தது. கிராம மந்தையில் இருந்து 2 கி.மீ., துாரத்திலுள்ள கோயிலுக்கு பூஜாரி பால் நிரம்பிய கரகத்தை சுமந்து சென்றார். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.