சென்னை: ஹஜ் புனித பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்கள் நவ. 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்திய ஹஜ் குழு சார்பில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்றுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகவும் ‘HCoI’ என்ற அலைபேசி செயலி வழியாகவும் நவ. 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப நேரடியாகவோ மாவட்டங்களில் உள்ள ஹஜ் தொண்டு நிறுவனங்கள் வழியாகவோ தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகம் வழியாகவோ விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பத்துடன் 2021 ஜன. 20 வரை செல்லத்தக்க இந்திய பன்னாட்டு பாஸ்போர்ட் முகவரி சான்று நபருக்கு 300 ரூபாய் செலுத்தப்பட்ட வங்கி ரசீது ஆகியவற்றை இணைத்து ஆன்லைன் வழியே பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.