திருச்சி: திருச்சியில் உள்ள பஞ்சாப் நஷேனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருச்சி லலிதா ஜூவ்ல்லர்ஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் முருகன் கும்பல்தான் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 9 மாதங்களாக நடந்த விசாரணையில் குற்றவாளிகள் பிடிபட்டதை தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீசார் ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.